ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கோவாக்சின் தடுப்பூசியை விரைவுபடுத்த நெருக்குதலா ?
ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கொரோனாவுக்கான கோவாக்சின் தடுப்பூசி தயாராகி விடும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அறிவிப்பு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் நிறுவனத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்களுக்கு இன்னும் சோதனை நடத்தப்படாத நிலையில் ஆய்வுக்குரிய நேரத்தை அளிக்காமல் தேதியை அறிவித்தது குறித்து பல்வேறு மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் கேள்வி எழுப்பியுள்ளனர். பாரத் பயோடெக் நிறுவனம் மூலம் தயாராகி வரும் கோவாக்சின் தடுப்பு மருந்து மனிதர்களிடம் பரிசோதிப்பதற்கான ஒப்புதலை பெற்றுள்ளது.
இந்நிலையில் நோயின் தீவிரமானப் பரவல் மற்றும் கொரோனாவால் ஏற்பட்டுள்ள நாடு தழுவிய அவசர நிலையால், தடுப்பூசியை விரைவாக பரிசோதிக்க , அதன் உரிமம் பெற்ற BBI நிறுவனத்துககு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் நெருக்குதல் அளித்து வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இந்தியாவில் தயாராகும் முதல் தடுப்பு மருந்து இது. இதனால் இது மத்திய அரசு மேற்பார்வையில் மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்புடன் தயாராகி வருகிறது. அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்த பின்னர் ஆகஸ்ட் 15ம் தேதி இந்த மருந்து பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கோவாக்சின் தடுப்பூசியை விரைவுபடுத்த நெருக்குதலா ?| #COVAXIN https://t.co/9wxNx5qNRX
— Polimer News (@polimernews) July 4, 2020
Comments