பாகிஸ்தானில் பேருந்து மீது ரயில் மோதி பயங்கர விபத்து : 21 பேர் பலி

0 3115

பாகிஸ்தானில் பேருந்து மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சீக்கியர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

கிழக்குப் பகுதியில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் ஷிக்குபுரா என்ற இடத்தில் சீக்கிய வழிபாட்டுத் தலத்தில் நடந்த நிகழ்வில் ஏராளமான சீக்கியர்கள் பங்கேற்றனர். நிகழ்வு முடிந்து சிலர் பேருந்து ஒன்றில் புறப்பட்டுச் சென்றனர்.

அப்போது, அங்கிருந்த ஆள் இல்லா ரயில்வே கிராசிங்கை பேருந்து கடக்க முயன்ற போது, அவ்வழியாக வந்த பயணிகள் ரயில், பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பக்தர்கள் 19 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் சிக்கிய பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் மேலும் 2 பேர் இறந்ததால், விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments