கொரோனா அதிவேக பாய்ச்சல்..! அச்சம் தரும் உச்சம்

0 2937

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 42 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களில் சுமார் 3 லட்சத்து 84 ஆயிரம் பேர் குணம் அடைந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 

அதி வேக பாய்ச்சல் காட்டும் கொரோனாவால், வைரஸ் தொற்று பாதிப்பு அச்சம் தரும் வகையில் உச்சம் எட்டி உள்ளது.

மஹாராஷ்டிராவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 6 ஆயிரத்து 364 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 93 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு, 198 பேர், கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.

பட்டியலில் 2 ஆவது இடம் வகிக்கும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, ஒரு லட்சத்தை தாண்டி விட்டது.

டெல்லியில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 95 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

குஜராத்தை பொறுத்தவரை, கொரோனா பாதிப்பு 34 ஆயிரத்தை தாண்ட, உத்தரபிரதேசத்தில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 26 ஆயிரத்தை நெருங்கி விட்டது.

மேற்கு வங்காளத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கி உள்ளது

அதேநேரம், கர்நாடகாவில் ஒரே நாளில் அதிகபட்சமாக ஆயிரத்து 700க்கும் மேற்பட் டோருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது. ((எனவே, அங்கு கொரோனா பாதிப்பு, 20 ஆயிரத்தை நெருங்கி விட்டது.

கேரளாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 211 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது. இவர்களில், வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 138 பேரும், வெளி மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பிய 39 பேரும் அடங்குவர்.

மொத்தத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு, 6 லட்சத்து 42 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. உயிர்ப்பலி, 18 ஆயிரத்து 541 ஆக உயர்ந்தது. )) நாடு முழுவதும் சுமார் 3 லட்சத்து 83 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். 

இதனிடையே, இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 60 புள்ளி 73 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments