கொரோனவில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 60 சதவிகிதத்தை தாண்டியுள்ளது
கொரோனவில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 60 சதவிகிதத்தை தாண்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்து 33 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தனர். இதனால், சிகிச்சை பெறுபவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை விடவும் அதிகமாக உயர்ந்துள்ளது. அத்துடன் குணமடையும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் 60.73 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
நாட்டில் தற்போது 2 லட்சத்து 27 ஆயிரத்து 439 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 3 லட்சத்து 79 ஆயிரத்து 891 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 576 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 92 லட்சத்து 97 ஆயிரத்து 749 என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
#COVID19Update
— Dr Harsh Vardhan (@drharshvardhan) July 3, 2020
⏺️Recovery Rate बढ़कर 60.73% हुआ
⏺️अब तक कुल 3,79,891 मरीज़ ठीक हो चुके
⏺️देश में कुल 2,27,439 सक्रिय मामले हैं
⏺️पिछले 24 घंटों में ठीक हुए मरीज़ों की संख्या 20,033
बदलकर अपना व्यवहार
कोरोना पर करें वार@MoHFW_INDIA #IndiaFightsCorona pic.twitter.com/VmQxAjTcQv
Comments