தமிழ்நாடு: 1 லட்சத்தை தாண்டியது பாதிப்பு

0 7991
தமிழகத்தில் மேலும் 4329 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டி உள்ளது. நாளுக்கு நாள், வைரஸ் தொற்று பாதிப்பு உயர்ந்த போதிலும் கொரோனாவை ஒடுக்கும் பணிகள் தீவிரமாக முடுக்கி விடப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் 2 - ஆவது நாளாக கொரோனா பாதிப்பு 4 ஆயிரம் என்ற எண்ணிக் கையில் நீடித்தது. தமிழகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வந்த 6 பேர், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 59 பேர் உள்பட ஒரே நாளில் 4 ஆயிரத்து 329 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி விட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆகவே, மொத்த பரிசோதனைகளின் எண் ணிக்கை 12 லட்சத்து 70 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 43 ஆயிரம் பேர், பல்வேறு மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து
357 பேர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டனர். எனவே, குணம் அடைந்து வீடு திரும்பி யோரின் எண்ணிக்கை 58 ஆயிரத்தை எட்டி உள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 64 பேர் கொரோனாவுக்கு பலி ஆனார்கள். சென்னை யைச்சேர்ந்த 42 வயது ஆண் மற்றும் 4 பெண்கள் உள்பட 22 பேர் தனியார் மருத் துவமனைகளில் மரணம் அடைந்தனர். திருவள்ளூரைச் சேர்ந்த 29 வயது பெண், விழுப்புரத்தைச்சேர்ந்த 36 வயது ஆண் மற்றும் 12 பெண்கள் உள்பட 42 பேர், அரசு மருத்துவமனைகளில் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனா உயிர்ப் பலி ஆயிரத்து 385 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய இரு மாவட்டங்கள் தவிர, எஞ்சிய அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி இருந்தது.

சென்னையில் நாளுக்கு நாள் உயரும் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந் தோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சென்னையில் புதிதாக 2 ஆயிரத்து 82 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டி விட்டது. அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டில் புதிதாக 330 பேரும், திருவள்ளூரில் 172 பேரும், காஞ்சி புரத்தில் 121 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மதுரையில் புதிதாக 287, திருவண்ணாமலையில் 151, வேலூரில் 145, தேனியில் 126, சேலத்தில் 99, ராணிப்பேட்டையில் 90 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பிற மாவட்டங்களில் மட்டும் 2 2,247 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், இது சென்னை பாதிப்பை விட அதிகமாகும். கொரோனாவுக்கு உயிரிழந்த ஆயிரத்து 385 பேரில், 996 பேர், சென்னையை ச் சேர்ந்தவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை தெரி வித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments