'டிக்டாக் ' அனாவசியம் அதனால் தடை... 'இரும்பு' அத்திவாசியம் அதனால்...?

0 9453

டிக்டாக் போன்ற செயலிக்கு தடை விதிக்கப்பட்டதால், இந்தியாவுக்கு ஏதாவது இழப்பு ஏற்பட்டுள்ளதா என்று ஆராய்ந்தால் நிச்சயமாக இல்லை. சொல்லப் போனால் குடும்பத்துக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி பல குடும்பங்கள் பிரியவே டிக்டாக் காரணமாக இருந்தது. தேவையில்லாத ஆணி புடுங்கப்படுவது போல, இந்தியாவுக்கு தேவையில்லாத டிக் டாக் நீக்கப்பட்டு விட்டது. வாழ்க்கைக்கு டிக்டாக் அத்தியாவசியமானதாக இல்லை அவ்வளவுதான்.

ஏற்கெனவே, சமூக வலைத்தளங்களில் தேவையில்லாமல் நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கிறோம். அதில், டிக்டாக் மிக மிக கொடுமையானது. பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி டிக்டாக் போதை என்பது போலாகிவிட்டது. இந்தியாவில் 20 கோடி டிக்டாக் பயனாளர்கள் இருந்தனர். தடையால் இப்போது அவர்கள் முடங்கிப் போனார்கள். இத்தகையை வீணாய்ப் போன ஆப்புகளால் சீன நிறுவனங்கள் கொள்ளை லாபம் பார்த்துக் கொண்டிருந்தன. சீன அரசு பத்திரிகையான குளோபல் டைம்ஸ் , 'இந்தியாவின் தடையால், டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் ரூ. 45,000 கோடி வருவாய் இழப்பை சந்திக்கும்' என்று செய்தி வெளியிட்டுள்ளது. அனாவசியமாக  இந்தியாவில் ஒட்டிக் கொண்டிருந்த டிக் டாக்குக்கு தடை விதிப்பது எளிது.

ஆனால், அத்திவசிய பொருளுக்கு அப்படி தடை விதித்து விட முடியுமா? உலகின் மிகப் பெரிய மருந்து உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. மருந்து உற்பத்திக்கு 80 சதவிகித மூலப் பொருள்களை சீனாவிடத்திலிருந்துதான் இந்தியா இறக்குமதி செய்கிறது. இத்தகைய அத்தியாவசிய பொருள்களுக்கு தடை விதித்து விட முடியாதுதானே. இரு நாடுகளுமே அதை செய்யவில்லை. அதே போல, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருள்களுக்கும் சீனா எந்தத் தடையும் விதிக்கவில்லை. இந்த பேண்டமிக் காலத்தில் இந்தியாவில் இரும்புக்கான தேவை முற்றிலும் குறைந்து விட்டது. கட்டுமானப்பணிகள் எங்குமே நடைபெறவில்லை.

image

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இரும்பு எந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று பார்த்தால் அது சந்தேகமே இல்லாமல் சீனாதான். கொரோனாவில் இருந்து மீண்டுவிட்ட சீனாவில் இப்போது இரும்பு தேவை அதிகரித்துள்ளது. இன்றைக்கு ஆசியாவின் இரும்பு தேவை மொத்தம் 80 சதவிகிதம் என்றால், அதில் 60 சதவிகிதத்தை சீனா இறக்குமதி செய்து கொள்கிறது. சீனாவுக்கு ஆண்டுக்கு 1,000 மில்லியன் டன் இரும்பு  தேவைப்படுகிறது. இதனால், எதிரிநாடு அப்படியென்று பார்ப்பதில்லை. இந்தியாவின் டாடா ஸ்டீல் உள்ளிட்ட முக்கிய இரும்பு உற்பத்தி நிறுவனங்களிடத்திலிருந்து சீனா இரும்பை வாங்கிக் கொள்கிறது. இந்திய இரும்பு உற்பத்தியில் 48 சதவிகிதத்தை சீனா கொள்முதல் செய்கிறது. 2020- ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை 4,40,000 மில்லியன் டன் இரும்பை இந்தியாவிலிருந்து சீனா இறக்குமதி செய்துள்ளது. சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் இரும்பு தேவை மிக குறைவு. ஆண்டுக்கு 100 மில்லியன் டன் இரும்பு இந்தியாவுக்கு போதுமானது. 

இது குறித்து டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டி.வி. நரேந்திரன் கூறுகையில், ''சுமார் மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, சீனாவிலிருந்து இந்தியா இரும்பு இறக்குமதி செய்து கொண்டிருந்தது. தற்போது, இந்தியாவில் இருந்து சீனா இறக்குமதி செய்கிறது. சீன இரும்பு இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட போது, இந்திய இரும்பு உற்பத்தி நிறுவனங்களின் திறன் குறித்து கேள்வி எழுந்தது. இப்போதோ, இந்திய இரும்பு உற்பத்தி நிறுவனங்கள் போட்டி போடும் திறனுடன் வளர்ந்து நிற்கின்றன.

உலகின் முன்னணி 10 இரும்பு உற்பத்தி நிறுவனங்களுள் டாடா ஸ்டீலும் ஒன்று. உலகின் முன்னணி  இரும்பு உற்பத்தியாளர்கள் 30 நிறுவனங்களில் பல இந்திய நிறுவனங்களும் உள்ளன. தற்போது, சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக இரும்பு தேவை உள்ள நாடு இந்தியா. அமெரிக்காவையும் ஜப்பானையும் முந்தி விட்டோம். அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் இந்தியாவின் இரும்பு தேவை 300 மில்லியன் டன்கள் உயரும். இதனால்தான், மத்திய அரசு  நிறைய இரும்பு உற்பத்தி நிறுவனங்களை அமைக்க விரும்புகிறது. நம் நாட்டில் உற்பத்தியாகும் இரும்புக்கு தேவையான டிமான்ட் இருக்கிறது. அதுபோல, இரும்பு மூலப்பொருளும் நம் நாட்டில் கொட்டி கிடப்பது கூடுதல் பலம்'' என்கிறார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments