மிக்- 29, சுகோய் ... ரூ. 39,000 கோடி மதிப்பில் இந்தியா வாங்கும் விமானங்கள் எவை?
சீனாவுக்கு எதிராக போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், ரூ.39,000 கோடி மதிப்பில் 33 போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ராணுவத் தளவாடங்களைக் கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
கடந்த மாதத்தில் லடாக், கால்வன் பள்ளத்தாக்கில் சீன - இந்தியப் படைகளுக்கு இடையே நடந்த கைகலப்பில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 40 க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் இறந்திருக்கலாம் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன. சீன தரப்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டது உண்மைதான் என்று சீன அரசு ஒத்துக்கொண்டாலும் எத்தனை பேர் இறந்தனர் என்று கூறவில்லை. சீன அரசின் அடாவடித்தனத்துக்கு எதிர் நடவடிக்கையாக 59 சீன செயலிகளைத் தடை செய்தது இந்தியா.
சீனா அரசு எல்லைப் பகுதியிலி 20,000- க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களைக் குவித்துளளது. இந்தியாவும் எதிர் நடவடிக்கையாக ராணுவ டாங்கிகள் மற்றும் வீரர்களின் எண்ணிக்கையை கால்வன் பள்ளத்தாக்கில் குவித்து வருகிறது.
எல்லையில் இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில் பெய்ஜிங்கை எச்சரிக்கும் விதத்தில் ரஷ்யாவிலிருந்து 21 மிக்- 29 போர் விமானங்கள் வாங்கப்படுகிறது. அதோடு, ரஷ்யாவிடமிருந்து லைசென்ஸ் பெற்று ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் 12 சுகோய் MKi விமானங்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள 59 மிக் - 29 விமானங்களை மேம்படுத்துதல், 248 ASTRA beyond-visual-range (BVR) ஏவுகணை கருவி கப்பலிலிருந்து 1000 கி.மீ பறந்து சென்று தாக்கும் ஏவுகணை , வெடிமருந்துகள், பினாகா ஏவுகணை ,பாதுகாப்பு மேம்பாடு தொடர்பான மென்பொருள் ஆகியவற்றை இந்தியா வாங்குகிறது.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சிலில் (Defence Acquisition Council ) முடிவு செய்யப்பட்டு உள்ளது. 21 மிக் -29 எஸ் விமானங்கள் நவீனமயமாக்கப்பட்டு அப்கிரேட் செய்வதற்கு ரூ7,418 கோடி 12 புதிய சு - 30 MKi விமானங்கள் வாங்குவதற்கு ரூ.10,730 கோடி செலவு செய்யப்படவுள்ளது.
இது குறித்துப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இந்த சூழ்நிலையில் இந்திய ராணுவத்தை எல்லைப் பகுதியிலும் கடல் பரப்பிலும் வலிமைப்படுத்துவது மிக முக்கியமாகும். அதற்கான நடவடிக்கை தான் இது" என்று கூறியுள்ளது.
Comments