பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

0 8157

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் மேலகுடியிருப்பில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் உடல், அவளது பெற்றோரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்தார்.இதேபோல் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரியும் வன்கொடுமை தடுப்புச் சட்ட சீர் உதவியாக 4 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் அறிவித்தார். இதையடுத்து அத்தொகைக்கான காசோலைகளை சிறுமியின் பெற்றோரிடம் மாவட்ட ஆட்சியர் இன்று அளித்தார்.

நிவாரண நிதி தங்களது பெரிதில்லை, இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரையும் கைது செய்ய வேண்டுமென உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments