அமேசான் காடுகளில் ஏற்படும் தீவிபத்து கடந்த மாதம் 20 சதவீதம் அதிகரிப்பு
பிரேசிலில் அமேசான் காடுகளில் ஏற்படும் தீ விபத்து கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவு ஜூன் மாதத்தில் 20 சதவீதம் உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமேசான் காடுகளில் ஆயிரம் 880 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 248 ஆக உயர்ந்துள்ளது என்று பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஐஎன்பிஇ தெரிவித்துள்ளது.
வரும் கோடைக்காலத்தில் இது மேலும் அதிகரிக்கும்பட்சத்தில் காட்டுத் தீ புகை பல்வேறு இடங்களுக்கு பரவி சுவாசப் பிரச்சனையை ஏற்படுத்துவதுடன் கொரோனா நோயாளிகளுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக சுகாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அமேசான் காடுகளில் ஏற்படும் தீவிபத்து கடந்த மாதம் 20 சதவீதம் அதிகரிப்பு #Amazonrainforest | #WildFire https://t.co/KBPSXrS7f9
— Polimer News (@polimernews) July 3, 2020
Comments