கனடா பிரதமரின் குடியிருப்புப் பகுதியில் அத்துமீறி நுழைந்த நபர்

0 1721

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குடியிருப்புப் பகுதிக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

ஓட்டாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஆளுநர் ஜூலி பேயட்டின் குடியிருப்புகள் உள்ள ரைடோ ஹாலின் நுழைவு வாயில் கதவை பிக்கப் வாகனம் கொண்டு மோதி சேதப்படுத்திய நபர், வளாகத்துக்குள் நுழைந்து பிரதமர் ட்ரூடோ குடியிருப்பு நோக்கி சென்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அந்த நபர் ஆயுதப்படையை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரின் மேற்படி விவரங்கள் தெரியாத நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் தனது வேலையை இழந்ததற்காக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் விரக்தியை வெளிப்படுத்த அந்த நபர் குடியிருப்பு வளாகத்துக்குள் நுழைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments