மொட்டை மாடியில் இருந்து சரமாரி துப்பாக்கி சூடு; போலீஸார் உடலை சல்லடையாக்கிய குண்டுகள்! உ.பி.யில் ரவுடி நடத்திய வெறியாட்டம்

0 12888

கான்பூரில் டி.எஸ்.பி உள்ளிட்ட 8 போலீஸ்காரர்கள் ரவுடிகளால் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடி விகாஷ் துபே மீது 60 வழக்குகள் உள்ளன. உத்தரபிரதேச மாநில அமைச்சர் சந்தோஷ் சுக்லா கடந்த 2001- ம் ஆண்டு ரவுடிகளால் ஷிவ்லி பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்திலேயே கொல்லப்பட்டார். இந்த வழக்கிலும் விகாஷ் துபேவுக்கு தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனாலும், இந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லையென்று நீதிமன்றம் விகாஷ் துபேவை விடுவித்து விட்டது.

தனக்கென்று தனி பாதுகாப்புப் படையை  உருவாக்கி ராணுவம் போன்று பயிற்சி அளித்து வைத்திருந்துள்ளார் விகாஷ் துபே. இந்த படையில் பெரும்பாலும் இளைஞர்கள்தான் இருப்பார்கள். இவர்களுக்கு, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களையும் வாங்கி கொடுத்திருந்தார். கிரிமினல் செயல்களில்  விகாஷ் துபே ஈடுபட்டுக் கொண்டிருந்தார். போலீஸார் அவரை கைது செய்ய தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.  இதற்கிடையே,  தன்னை கொலை செய்து விடுவதாக விகாஷ் துபே மிரட்டியதாக ராகுல் திவாரி என்பவர் கான்பூர் போலீஸில் புகாரளித்தார்.imageரவுடி விகாஷ் துபே

இந்த வழக்கில்தான் விகாஷ் துபேவை பிடிக்க சௌபேபூர் போலீஸ் நிலையத்தை அதிகாரிகள், கான்ஸடபிள்கள் விகாஷ் துபேவின் சொந்த ஊரான டிக்ரு கிராமத்துக்கு நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் சென்றுள்ளனர்.ஆனால், விகாஷ் துபே முன்னரே உஷாராகி, தன் வீடு இருந்த பகுதியில் பொக்லைன் இயந்திரத்தை நிறுத்தி சாலையை அடைத்து வைத்துள்ளார். விகாஷ் துபேவின் வீட்டை போலீஸார் நெருங்கியதும் வீட்டின் மொட்டை மாடியிலிருந்து சராமரியாக ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் , டி.எஸ்.பி தேவேந்திர மிஷ்ரா , இன்ஸ்பெக்டர் மகேஷ் யாதவ், சப் இன்ஸ்பெக்டர்கள் அனுப்குமார், பாபுலால் கான்ஸ்டபிள்கள் சுல்தான்சிங், ராகுல், ஜிதேந்திரா, பப்லு ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும் 5 போலீஸார் படுகாயமடைந்து மருத்துவமனையில்வ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரவுடிகள் உயர்ந்த பகுதியில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தியதால், போலீஸ்ரால் தப்பிக்க முடியாமல் போயுள்ளது. உத்தரபிரதேசத்தில் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத், போலீஸார் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

இந்த சம்பவத்தயடுத்து, கான்பூர் நகரமே சீல் வைக்கப்பட்டுள்ளது. போலீஸார் மீது தாக்குதல் நடத்திய ரவுடிகள் கும்பல் தற்போது காட்டுப் பகுதிக்குள் தப்பி ஓடி  விட்டதாக சொல்லப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments