இந்தியாவின் 2வது கொரோனா தடுப்பூசிக்கு மனித பரிசோதனைக்கான அனுமதி
கோவாக்சினை தொடர்ந்து இந்திய தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள மற்றொரு கொரோனா தடுப்பூசிக்கும் மனித பரிசோதனைக்கான அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
அகமதாபாதை சேர்ந்த மருந்து நிறுவனமான ஜைடஸ் காடிலா தயாரித்துள்ள மருந்து, விலங்குகளிடம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக, மனிதர்களிடம் சோதித்துப் பார்க்க இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார்.
இதன் மூலம், முதல் கட்ட பரிசோதனை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களிடம், குறிப்பிட அளவிலான டோசுகளுடன் நடத்தப்படும். அதில் கிடைக்கும் முடிவுகள் மற்றும் பக்கவிளைவுகளின் அடிப்படையில் இரண்டாம் கட்ட சோதனை சற்று அதிக எண்ணிக்கையில் நடத்தப்படும்.
இந்தியாவின் 2வது கொரோனா தடுப்பூசிக்கு மனித பரிசோதனைக்கான அனுமதி | #coronavaccine | #COVAXIN https://t.co/GbbdFLuvIr
— Polimer News (@polimernews) July 3, 2020
Comments