அறந்தாங்கி சிறுமி கொலை - முதலமைச்சர் இரங்கல்..நடவடிக்கைக்கு உறுதி

0 5267

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக 5 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ள முதலமைச்சர், இந்த கொடூர செயலுக்கு காரணமான குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தர துரித நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறுமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் முதலமைச்சர் தெரிவித்துக் கொண்டுள்ளார். ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவிலும், இக்கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments