65 வயதிற்கு மேற்பட்டோர்,கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு தபால் வாக்கு
வரும் அக்டோபர்-நவம்பர் மாத வாக்கில் பீகார் தேர்தல் நடக்க உள்ள நிலையில், 65 வயதுக்கு மேற்பட்டவர்களும், கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களும் தபால் வாக்குகளை பயன்படுத்தலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள், குவாரன்டைனில் இருப்பவர்கள் ஆகியோருக்கும் தபால் வாக்குகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
65 வயதுக்கு மேற்பட்டவர்களும், கர்ப்பிணிகளும், நீரிழிவு, சிறுநீரக நோய்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுபவர்களும் எளிதில் வைரஸ் தொற்றுக்கு ஆளாக வாய்ப்புள்ளதால் அவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அரசும், மருத்துவர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுவரை 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், அயல் மாநிலங்களில் அத்தியாவசிய பணிகளில் இருப்பவர்களுக்கும் மட்டுமே தபால் வாக்கு வசதி வழங்கப்பட்டு வருகிறது.
65 வயதிற்கு மேற்பட்டோர்,கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு தபால் வாக்கு | #Postalballot | #coronavirus https://t.co/d5zg3KKpx6
— Polimer News (@polimernews) July 2, 2020
Comments