உளுந்தூர்ப்பேட்டை அதிமுக எம்.எல்.ஏ குமரகுருவுக்கு கொரோனா உறுதி

0 2571

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குமரகுருவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை பசுமைவழிசாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இருதய கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள எம்.எல்.ஏ குமரகுரு, மாதந்தோறும் வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது வழக்கம்.

இந்நிலையில் திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டு பசுமை வழிசாலையிலுள்ள அப்பலோ மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து தனிமைபடுத்தப்பட்ட வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது குடும்பத்தினர் உட்பட அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments