தேவையற்ற செயலிகளை செல்போனில் பதிவிறக்கம் செய்வதை சைபர் கிரைம் எச்சரிக்கை
59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்று செயலிகளை பதிவிறக்கம் செய்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
தடை செய்யப்பட்ட சீன செயலிகளை தற்போது பயன்படுத்தவில்லை என்றாலும், பதிவிறக்க நீக்கம் செய்தாலும் கூட அதே செல்போனில் தான் அந்த செயலி இருக்கும் என கூறும் சைபர் வல்லுநர்கள், அதன் மூலம் தொடர்ந்து பயனாளரை கண்காணிக்கவும், தகவலை திருடவும் முடியும் என்கின்றனர்.
ஆன்லைன் மூலம் நடக்கும் வங்கி மோசடி தொடங்கி பல்வேறு சைபர் குற்றங்கள் நடப்பதற்கு இது போன்ற செயலிகளே வழி வகுக்கிறது எனவும், இதனால் தேவையற்ற செயலிகளை செல்போனில் பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும் சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
Comments