ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு எதிராக சீனா அறிக்கை : அமெரிக்கா, ஜெர்மனி முட்டுக்கட்டை
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு எதிரான சீனாவின் அறிக்கையை வெளியிடுவதற்கு, அமெரிக்கா மற்றும் ஜெர்மனி முட்டுக்கட்டை போட்டுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி பங்குச்சந்தையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா மீது அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் குரேஷி மற்றும் பிரதமர் இம்ரான்கான் குற்றம்சாட்டி இருந்தனர்.
இது தொடர்பாக இரங்கல் மற்றும் கண்டனம் தெரிவிக்கும் விதமாக சீனா தயாரித்த வரைவு அறிக்கை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் புதன்கிழமை வெளியிடப்பட இருந்தது.
ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக முதலில் ஜெர்மனியும், அதன் பிறகு அமெரிக்காவும் தலையிட்டு அந்த அறிக்கை வெளியிடுவதை தாமதப்படுத்தின.
சீனாவின் அறிக்கை இறுதியில் வெயிடப்படலாம் என்றாலும், பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு எதிரான நடவடிக்கை உலகலாவிய அதிருப்தியின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது.
Comments