நாட்டிலேயே முதலாவது பிளாஸ்மா வங்கி டெல்லியில் தொடக்கம்

0 1465

நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கியை டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்துள்ளார்.

கொரோனா பாதிப்பிலிருந்து குணமான நபரிடம் இருந்து பிளாஸ்மாவை எடுத்து அத்தொற்றால் பாதிக்கப்பட்ட பிறருக்கு செலுத்தி அளிக்கப்படும் சிகிச்சைக்கு பிளாஸ்மா சிகிச்சை என பெயரிடப்பட்டுள்ளது.

அதுபோல சேகரிக்கப்படும் பிளாஸ்மாவை சேகரித்து வைக்க டெல்லியில் ஐ.எல்.பி.எஸ். ஆஸ்பத்திரியில் பிளாஸ்மா வங்கியை அரவிந்த் கெஜரிவால் காணொலி காட்சியின் மூலம் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், தகுதி வாய்ந்தவர்கள், பிளாஸ்மா தானம் செய்ய விரும்பினால், 1031 என்ற எண்ணில் அழைக்கலாம், அல்லது 8800007722 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தகவல் அனுப்பலாம் என்றார்.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களில், 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் பிளாஸ்மா தானம் செய்யலாம் எனவும், இதற்கு உடல் எடை 50 கிலோவுக்கு அதிகம் இருக்க வேண்டும், குழந்தை பெற்ற பெண்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments