"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
சாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதி வீட்டில் போலீஸ் பாதுகாப்பு
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்படும் தலைமைக் காவலர் ரேவதி வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜெயராஜ் - பென்னிக்ஸை காவலர்கள் விடிய விடிய தாக்கியதாகவும், காவல் நிலைய டேபிள் மற்றும் லத்தியில் ரத்தக்கரை படிந்திருந்ததை நேரில் பார்த்ததாக தலைமைக் காவலர் ரேவதி மாஜிஸ்ரேட்டிடம் சாட்சியம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், காவலர் ரேவதியின் பாதுகாப்பை உறுதி செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், சாத்தான்குளம் அருகே அரிவான்மொழியில் அமைந்துள்ள காவலர் ரேவதி வீட்டின் முன் 2 பெண் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, தனது மனைவி ரேவதிக்கு காவல்துறை உயர் அதிகாரிகளிடம் இருந்து எவ்வித மிரட்டலோ, அழுத்தமோ வரக்கூடாது என ரேவதியின் கணவர் சந்தோஷம் வலியுறுத்தியுள்ளார்.
Comments