சென்னையில் நேற்றிரவு முதல் தற்போது வரை 26 பேர் பலி
சென்னையில் நேற்றிரவு முதல் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர் உட்பட 26 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 9 பேரும், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 5 பேரும், ஓமந்தூரார் மற்றும் அரசு ஸ்டான்லி மருத்துவமனைகளில் தலா 4 பேரும் பலியாகியுள்ளனர். மயிலாப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் ஒருவரும், ஓய்வு பெற்ற இந்திய உணவு கழக அதிகாரி ஒருவரும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
அதே போல் கண்ணகி நகரில் ரேஷன் கடையில் பணியாற்றி வந்த 50 வயது ஊழியர் மூச்சுதிணறல் ஏற்பட்டு உயிரிழந்ததால், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவருக்கு கொரானா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதே போல் ஆயிரம் விளக்கு, அமைந்தகரை பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் தலா ஒருவர் வீதம் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் நேற்றிரவு முதல் தற்போது வரை 26 பேர் பலி #Chennai | #CoronaVirus | #Covid19 | #ChennaiCorona https://t.co/hOINzwXve7
— Polimer News (@polimernews) July 2, 2020
Comments