கொலம்பியாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது

0 1058

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. ஜூன் 30ம் தேதி நிலவரப்படி கொலம்பியாவில் பாதிப்பு எண்ணிக்கை 97 ஆயிரத்து 846ஆக இருந்தது.

இந்நிலையில் ஜூலை 1ம் தேதியான நேற்று மட்டும் மிகவும் அதிகபட்சமாக 4,163 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொலம்பியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 9ஆக அதிகரித்துள்ளது.

இதில் 54 ஆயிரத்து 941 பேர் சிகிச்சை பெறும் நிலையில், 3,470 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.  ஏற்கெனவே 19 நாடுகளில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்துக்கும் மேல் பதிவாகியுள்ளது. கொலம்பியாவிலும் 1 லட்சத்தை தாண்டியதால், அந்நாடுகளின்   எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments