பாய்லர் வெடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் என்எல்சி முன்பு போராட்டம்
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு வழங்குவது குறித்து சுமூக முடிவு எடுக்கும் வரை உடல்களை வாங்க மாட்டோம் என்று கூறி 2வது நாளாக குடும்பத்தினர் அனல்மின்நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
என்எல்சியில் நேற்று பாய்லர் வெடித்து 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவர்கள் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு, குடும்பத்தினர் ஒருவருக்கு நிரந்தர பணி வழங்கப்படும் என்று என்எல்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்து ஒரு கோடி ரூபாய் நிவாரணம் கோரி தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளநிலையில், அனல்மின்நிலைய 2வது வாயிலை ஏராளமானோர் முற்றுகையிட்டுள்ளனர். இதனால் அதிகளவில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
Comments