சாத்தான்குளம் இரட்டைக் கொலைக்குக் காரணமான அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின்

0 1983

சாத்தான்குளம் இரட்டைக் கொலைக்குக் காரணமான அனைவரின் பெயர்களையும் முதல் தகவல் அறிக்கையில் சேர்த்து, அவர்களைக் கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு சிலரை மட்டும் கைது செய்து, ஒப்புக்குக் கணக்குக் காட்டுவதாக இருக்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார். வாக்குமூலம் கொடுத்த தலைமைக் காவலர் ரேவதி மிரட்டப்பட்டதையும், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டதையும் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்கின் ஒவ்வொரு நகர்வையும் பொதுமக்கள் கண்காணித்துக் கொண்டேதான் இருப்பார்கள் என்றும், யாரையும் காப்பாற்ற  தமிழக அரசு முயற்சிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

'பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசை'ச் சேர்ந்த சிலருக்கும் இதில் நெருக்கமான தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதால் அவர்களும் விசாரிக்கப்பட வேண்டும் என திமுக தலைவர் கோரியுள்ளார்.

தலைமைக் காவலர் ரேவதிக்கும், கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments