சென்னை மாநகரில் 144 தடை உத்தரவு - ஜூலை 31 வரை நீட்டிப்பு
சென்னையில் 144 தடை உத்தரவை ஜூலை 31 வரை நீட்டித்துக் மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கொரோனா நோய் தொற்று பரவும் விதத்தை தடுக்கும் விதமாக, தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி சட்டப்பிரிவு (2) தொற்று நோய் சட்டம் மற்றும் ஒழுங்கு முறை 1897-ல் கூறப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நடைமுறைப் படுத்தும் வகையில் 144 குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடுவதை தடை செய்யும் ஆணை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தடை உத்தரவை மீறுபவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுநலன் மற்றும் பொது அமைதியை நிலை நாட்டும் வகையில் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் 144 தடை உத்தரவு - ஜூலை 31 வரை நீட்டிப்பு | #Chennai144 | #Chennailockdown https://t.co/oHBKt9EDvC
— Polimer News (@polimernews) July 2, 2020
Comments