நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் புகுந்த வெட்டுக்கிளிகள்
விவசாய பயிர்களுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தி வரும் வெட்டுக்கிளிகள், தற்போது அண்டை நாடான நேபாளத்துக்குள்ளும் புகுந்துள்ளன.
நேபாளத் தலைநகர் காத்மாண்டில் புகுந்த ஆயிரகணக்கான வெட்டுக்கிளிகள், அங்கு விவசாய நிலங்களில் பரவலாக பரவியுள்ளன. இருப்பினும் காத்மாண்டு மக்களுக்கு வெட்டுக்கிளிகள் வரலாம் என அதிகாரிகள் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.
வெட்டுக்கிளிகளை விரட்டும் நோக்கில், காத்மாண்டில் சிலர் பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை தட்டி சத்தம் எழுப்பும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
Comments