சாத்தான்குளம் வழக்கு - அப்ரூவராகும் சிறப்பு உதவி ஆய்வாளர் பால் துரை
![](https://d3dqrx874ys9wo.cloudfront.net/uploads/web/images/750x430/1593667913113876.jpg)
சாத்தான்குளம் தந்தை, மகன் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறப்பு உதவி ஆய்வாளர் பால் துரை அப்ரூவராக மாற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தாக்குதலுக்குள்ளான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
கொலை வழக்கு பதிவு செய்து சம்பவத்தில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர் முருகன் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாகியுள்ள காவலர் முத்துராஜை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவம் நடந்த போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால் துரை அப்ரூவராக மாறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இது தொடர்பான வழக்கில் தலைமை காவலர் ரேவதி, எழுத்தர் பியூலா ஆகியோர் சாட்சியம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments