ஜூன் மாதத்தில் UPI மூலம் ரூ.2.62 லட்சம் கோடி பண பரிவர்த்தனை..
ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 2 லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாய்க்கான பணப் பரிவர்த்தனை, யுபிஐ மூலம் செய்யப்பட்டு உள்ளதாக தேசிய பணப் பட்டுவாடா கழகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளதால் ஆன்லைன் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக கடந்த மாதம் 134 கோடி முறை யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
முன்னதாக ஏப்ரல் மாதத்தில் ஒரு லட்சத்து 51 ஆயிரம் கோடி ரூபாயும், மே மாதத்தில் 2 லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கும், யுபிஐ மூலம் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக தேசிய பணப் பட்டுவாடா கழகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
Money transfers have now become simpler and safe thanks to BHIM UPI. #BHIMUPI #UPIChalega #DigitalPayments #5YearsOfDigitalIndia @dilipasbe pic.twitter.com/2PXCdRX2J4
— BHIM (@NPCI_BHIM) July 1, 2020
Comments