மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 15,000 கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் 10 ஆயிரம் கன அடியில் இருந்து 15 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 12ம் தேதி தண்ணீர் திறந்துவைத்தார்.
அப்போது முதல் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் விவசாயிகளுக்கு தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து இன்று மாலை முதல் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் கூடுதலாக திறந்து விடப்பட்டு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணை நீர் மட்டம் 90.18 அடியாகவும், நீர் இருப்பு 52.857 டி.எம்.சி.யாகவும் உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 938 கன அடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 15,000 கன அடியாகவும் உள்ளது.
Comments