உ.பி. ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல் ம.பி. ஆளுநராகவும் பொறுப்பேற்பு

0 1988

உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல் மத்தியப் பிரதேச ஆளுநராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மத்தியப்  பிரதேச ஆளுநரான 85 வயது லால்ஜி டாண்டனுக்கு சுவாசப் பிரச்சினை, சிறுநீர் பிரச்சினை, மற்றும் காய்ச்சலால் தீவிர சிகிச்சை பிரிவில் சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உத்தரப்பிரதேச ஆளுநரான ஆனந்தி பென் பட்டேலுக்கு மத்தியப் பிரதேச ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. போபாலில் உள்ள ஆளுநர் மாளிகையில் அவருக்கு மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அஜய் குமார் மித்தல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நிகழ்ச்சியில் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆனந்தி பென் பட்டேல் ஏற்கனவே மத்திய பிரதேச ஆளுநராக இருந்தவர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments