சீனாவின் வெய்போ நிறுவன கணக்கை மூட பிரதமர் மோடி முடிவு
சீனாவை சேர்ந்த சமூக வலைதளமான வெய்போவில் உள்ள கணக்கை மூட பிரதமர் மோடி முடிவு செய்து இருக்கிறார்.
கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடன் நிகழ்ந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்ததை அடுத்து, சீனாவிற்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்திய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக கூறி,டிக்டாக், ஷேர்இட், வெய்போ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு இரு தினங்களுக்கு முன் தடை விதித்தது.
இந்த நிலையில் டிவிட்டரைப் போன்று குறுந்தகவல் அனுப்ப பயன்படும் சீனாவின் வெய்போ கணக்கில் இருந்து வெளியேற பிரதமர் மோடி முடிவு செய்து இருக்கிறார்.
விஐபி கணக்குகளை மூடுவதற்கு சில நடைமுறைகளை அந்த நிறுவனம் பின்பற்றுவதால், பிரதமரின் கணக்கை மூட காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. சில வருடங்களுக்கு முன் அதில் பிரதமர் கணக்கு தொடங்கி இருந்தார். பிரதமர் பதிவிட்ட 115 பதிவுகளில் 113 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.
Comments