அதி வேக பாய்ச்சலில் கொரோனா அச்சம் தரும் உச்சம்
தமிழகத்தில், கொரோனா பாதிப்பு, 94 ஆயிரத்தை தாண்டி உள்ளது. பரிசோதனை களின் எண்ணிக்கை 31 ஆயிரத்திற்கும் மேலாக அதிகரிக்கப்பட்ட நிலையில் குணம் அடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை சுமார் 53 ஆயிரமாக உயர்ந் துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, கொரோனா பாதிப்பு அதிவேகமாக உயர்ந்து , புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 ஆயிரத்து 882 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 94 ஆயிரத்தைத் தாண்டி விட்டது. இதில், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பிய 75 பேரும் அடங்குவர்.
ஒரே நாளில் அதிகபட்சமாக 63 பேர், கொரோனாவுக்கு பலி ஆகி உள்ளனர். இவர்களில் 6 பெண்கள் உள்பட 26 பேர், தனியார் மருத்துவமனைகளில் மரணம் அடைந்தனர். சென்னையில் 34 வயது ஆண் மற்றும் 36 வயது பெண் உள்பட 37 பேர், பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் சுமார் 40 ஆயிரம் பேர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேநேரம், கடந்த 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 852 பேர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டதால் தமிழகத்தில் குணம் அடைந்து வீடு திரும்பி யோரின் எண்ணிக்கை சுமார் 53 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக ஒரே நாளில் 31 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பரி சோத னை நடத்தப்பட்டதாக மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ள தமிழக சுகா தாரத்துறை, இதுவரை மொத்தம் 12 லட்சம் பேருக்கு மேல், பரிசோதனை நடத்தி முடித்து இருப்பதாக விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டம் தவிர, அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி இருந்தது.
Comments