சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.5,625 கோடி வழங்க உலக வங்கி ஒப்புதல்

0 1596

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக 5625 கோடி ரூபாய் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அந்த நிறுவனங்களுக்கு உடனடியாக நிதி உதவி அளிக்கும் விதமாகவும், லட்சக்கணக்கானவர்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்கும் விதத்திலும் உலக வங்கி இந்த நிதி உதவியை அறிவித்துள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் சிறு குறு நிறுவனங்கள் மையமாக இருப்பதாகவும் இந்தியாவின் பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்டு எடுப்பதில்முக்கிய பங்கு வகிக்கும் என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் முதல் இதுவரை கொரோனா பாதிப்புக்காக இந்தியாவிற்கு 20 ஆயிரத்து 625 கோடி ரூபாயை வழங்குவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. gfx out

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments