லடாக் எல்லையில் 20,000 வீரர்களை சீனா குவித்திருப்பதாக தகவல்
லடாக்கை ஒட்டிய எல்லைப் பகுதி நெடுகிலும் சீனா 20 ஆயிரம் வீரர்கள் அடங்கிய 2 படைப்பிரிவை நிறுத்தியிருப்பதாகவும், அதேபோல் அப்பகுதிக்கு 48 மணி நேரத்துக்குள் விரைந்து வரும் வகையில் சின்சியாங்கில் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வீரர்களை தயார் நிலையில் வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கால்வன் பள்ளத்தாக்கு மோதல் சம்பவத்தையடுத்து இருநாடுகள் இடையே போர் பதற்றம் நிலவும் நிலவுகிறது. இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய இந்திய அரசு வட்டாரங்கள், திபெத்தில் வழக்கமாக 2 படைப்பிரிவுகளை சீனா நிறுத்தி வைத்திருக்கும் என்ற போதிலும் தற்போது 2 படைபிரிவுகளை 2 ஆயிரம் கிலோ மீட்டர் அப்பாலுள்ள சீனாவின் மையபகுதியிலிருந்து இந்திய எல்லை நோக்கி நகர்த்தியிருப்பதாக தெரிவித்தன.
இந்த படைப்பிரிவு நடமாட்டத்தை தீவிரமாக இந்தியா கவனிப்பதாகவும், இதற்கு பதிலடியளிக்கும் வகையில் கூடுதலாக நிறுத்தப்பட்ட 2 படைப்பிரிவோடு சேர்த்து மேலும் 1 படைப்பிரிவை அனுப்புவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
Comments