சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை ஏறுமுகத்தில் உள்ளது. ஒரு சவரன் வரலாறு காணாத வகையில் 37 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாகி வருகிறது.
இந்நிலையில் நேற்று 4 ஆயிரத்து 631 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் ஆபரணத்தங்கம் இன்று, 43 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 674 ரூபாயாக உள்ளது.
அதே போல் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 344 ரூபாய் அதிகரித்து 37 ஆயிரத்து 392 ரூபாயாக உள்ளது. பார் வெள்ளி ஒரு கிலோ ஆயிரத்து 200 ரூபாய் அதிகரித்து 54 ஆயிரத்து 300 ரூபாயாக உள்ளது.
கொரோனா தாக்கம் காரணமாக தங்க நகை விற்பனை பாதிக்கப்பட்டிருந்தாலும், பங்குச்சந்தைகளில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பதே விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு | #goldprice | #goldRateHike https://t.co/sMZhIWNwRY
— Polimer News (@polimernews) July 1, 2020
Comments