நெய்வேலி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு

0 1872

நெய்வேலி அனல்மின் நிலைய விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கொதிகலன் வெடித்த விபத்தில் உயிரிழந்த 6 நபர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்தனர் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு தான் உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments