நெய்வேலி விபத்து : முதலமைச்சரிடம் விவரம் கேட்டறிந்த அமித் ஷா

0 1777

நெய்வேலி என்எல்சி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்துக் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தார். 

அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில், நெய்வேலி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழப்பு நேர்ந்ததை அறிந்து தான் வேதனையடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்துத் தமிழக முதலமைச்சரிடம் தான் பேசியதாகவும், தேவையான அனைத்து உதவிகளும் செய்வதாக உறுதியளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையினர் ஏற்கெனவே மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். காயமடைந்தோர் விரைவில் குணம்பெற இறைவனை வேண்டிக் கொள்வதாகவும் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments