துருக்கியில் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் போராட்டம் , பாதுகாப்புப் படையினருடன் தள்ளுமுள்ளு
துருக்கியில் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
துருக்கியில் தற்போது ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஒரு வழக்கறிஞர் சங்கமே செயல்படுகிறது. இதன் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் வரைவு மசோதாவை நாடாளுமன்றத்தில் அதிபர் எர்டோகனின் ஏகே கட்சி கொண்டு வந்துள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இஸ்தான்புல்லில் உள்ள பிரதான நீதிமன்றம் முன்பு ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை பாதுகாப்புப் படையினர் தடுத்ததால், இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு நேரிட்டது.
Comments