ஜெர்மனியில் 9,500 அமெரிக்க ராணுவ வீரர்களை குறைக்கும் திட்டம்
ஜெர்மனியில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ வீரர்கள் எண்ணிக்கையில் 9,500ஐ குறைக்கும் திட்டத்துக்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஜெர்மனியில் உள்ள தனது ராணுவ தளத்தில் 34 ஆயிரத்து 500 ராணுவ வீரர்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. அதை 25 ஆயிரமாக குறைக்கும் திட்டத்துக்கு டிரம்ப் ஒப்புதல் அளித்திருப்பதாக பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜோனோதான் ஹாப்மேன் தெரிவித்துள்ளார்.
இந்த 9,500 வீரர்களும், ரஸ்யாவின் அச்சுறுத்தலை தடுக்கும் வகையிலும், நேட்டோவை பலபடுத்தும் வகையிலும், மீண்டும் பயன்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் வேறு எந்த நேட்டோ நாட்டில் நிறுத்தப்படுவார்களா என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை. எனினும் போலந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளன.
Comments