புரியாத புதிராக கொரோனா... இதுவரை மருத்துவ உலகம் கற்றுக்கொண்டது என்ன?

0 10668
சீனாவிலிருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரசுடன் ஆறு மாதங்களுக்கும் மேலாக உலகம் போராடிக்கொண்டிருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரசுக்கு எதிரான போரில் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், காவலர்கள், அரசு இயந்திரங்கள் பங்கெடுத்துள்ளன. இந்த வைரஸை அழிக்கும் மருந்தைக் கண்டுபிடிக்க முடியாமல் உலக விஞ்ஞானிகள் திணறிக்கொண்டிருக்கிறார்கள். புதுப்புது மருந்துகள் நோய் சிகிச்சைக்கு அறிமுகப்படுத்தப்பட்டாலும் அவற்றால் கொரோனா வைரஸை முழுவதுமாக அழிக்க முடியவில்லை. 
 
கன்னுக்குத் தெரியாத, கொரோனா வைரசுடனான போரில் மருத்துவ உலகம் இதுவரை கற்றுக்கொண்டது என்ன? 
 
* கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த உறைவு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. அதனால் அபிக்சாபன் (Apixaban), டாபிக்கட்ரான்  (Dabigatran) உள்ளிட்ட ரத்த மெலிவு ஏஜெண்டுகள் அதிகளவில் பயன்படுகின்றன 
 
* நுரையீரலில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க இயந்திரங்களைப் பயன்படுத்தும் முறைக்கு மாற்றாக நோயாளிகளின் வயிற்றை அழுத்தும் Proning (குப்புறப்படுக்க வைக்கும் முறை) முறையைக் கண்டறிந்துள்ளனர். 
 
* நுரையீரல் உள்ளிட்ட சுவாச மண்டலங்கள் மட்டுமல்லாமல் இதயம், சிறுநீரகம், கல்லீரல், மூளை உள்ளிட்ட பகுதிகளையும் கொரோனா வைரஸ் தாக்கும். 
 
* இதுவரை கொரோனா வைரசுக்கு எதிராக பல்வேறு மருந்துகள் அறிமுகப்படுத்தியிருந்தாலும் 'ராம்டேசிவர் மருந்து மட்டுமே நம்பிக்கை தருவதாக உள்ளது. டெக்சாமெத்தசோன் எனும் ஸ்டீராய்டு  கொரோனா வைரஸால் ஏற்படும் உடல் அழற்சியைத் தடுக்கப் பயன்படுகிறது. கொரோனாவால் நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவர்களின் பிளாஸ்மா ஓரளவுக்கு நேயாளிகளை குணப்படுத்த  துணை புரிகிறது. 
 
* பரவலாக்கப்படும் சோதனைகள் மற்றும் விரைவாகக் கிடைக்கும் சோதனை முடிவுகள் மருத்துவமனை மீதான அழுத்தத்தைக் குறைக்கிறது. 
 
* உலகளாவிய சுகாதார நிபுணர்களால் பகிர்ந்துகொள்ளப்படும் தகவல்கள் நோயாளிகளை குணப்படுத்த முக்கியமானதாக இருக்கின்றன.
 
* கொரோனா விவகாரத்தில் நோய் தொற்றாமல் தடுத்துக்கொள்வதே முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. அதனால் தான் பொதுமக்கள் முககவசம்  அணிய வேண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், சுகாதாரமாக இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்துகிறார்கள். 
 
கொரோனாவைப் பொறுத்தவரை இதுவரை புரியாத புதிர்கள்...
 
* எந்த நோயாளிக்கு எந்தவிதமான சிகிச்சை அளிப்பது என்பதில் உறுதியற்ற தன்மையே நிலவுகிறது. 
 
* கோவிட 19 நோயாளிகள் குணமாக்க எவ்வளவு காலம் பிடிக்கிறது என்பதற்கும் சரியான விடையில்லை. 
 
* நோய் தாக்கினால், அதன் பின்விளைவு குறித்தும் சரியான புரிதல் இல்லை. 
 
"நுரையீரலில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க முதுகைத் திருப்புவதற்கு பதிலாக வயிற்றைத் திருப்ப வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டதே கொரோனாவிலிருந்து நாம் கற்றுக்கொண்டிருக்கும் மிக்கபெரிய பாடம். இதிலிருந்தே நாம் இன்னும் எவ்வளவு தூரம் முன்னேற வேண்டும் என்பது நமக்கு விளங்கும்" என்று கூறியிருக்கிறார் நியூ மெக்சிகோவின் முதன்மை மருத்துவ அலுவலராக, வளோரி வாங்ளேர். 
 
சர்வதேச அளவில் பரவத்தொடங்கி ஆறு மாதங்களைக் கடந்த பிறகும் கோரோனோ வைரஸ் இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது என்பது தான் நிதர்சனம். வருமுன் காத்துக்கொள்வது மட்டுமே இப்போதைக்கு நம்மைப் பாதுகாக்கும் ஒரே வழி!
 
SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments