2000 பேரை பணிக்கு எடுக்க பாரத ஸ்டேட் வங்கி முடிவு
கிராமப்புற கடன் திட்டங்கள் மற்றும் கடன் அட்டை உள்ளிட்ட வர்த்தகங்களுக்காக 2000 பேரை வேலைக்கு அமர்த்த பாரத ஸ்டேட் வங்கி முடிவு செய்துள்ளது.
இளநிலை மற்றும் நடுத்தர மட்டத்திலான இந்த நியமனங்கள் அடுத்த 6 மாதங்களில் நடத்தப்படும் என கூறப்படுகிறது. கிராமப்புற வங்கி செயல்பாடுகள், வேளாண் கடன்கள் ஆகியவற்றில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதே போன்று கிரடிட் கார்டு சந்தைப்படுத்துதலில் சிறிய நகரங்களையும் உட்படுத்தும் வகையில் இந்த பணியாளர் நியமனம் நடைபெறும் என கூறப்படுகிறது. இளநிலை பணியாளர்களுக்கு மாத சம்பளம் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
Comments