ஆந்திராவில் ஆம்புலன்ஸ் சேவையை மறுசீரமைக்கும் வகையில் 1,088 புதிய வாகனங்கள்
ஆந்திர மாநிலத்தில் ஆம்புலன்ஸ் சேவையை மறுசீரமைக்கும் வகையில் வாங்கப்பட்டுள்ள ஆயிரத்து 88 ஆம்புலன்சுகளை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கொடியசைத்து துவங்கி வைத்தார். 108 ஆம்புலன்ஸ் சேவையின் வாகனங்கள் பழுதடைந்து, உரிய நேரத்துக்கு செல்ல முடிவதில்லை என புகார் எழுந்தது.
ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றதும், ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு 104 மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவை கொண்டுவரப்படும் என அறிவித்தார். அதன்படி விஜயாவாடாவில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில், புதிதாக வாங்கப்பட்டுள்ள 1088 ஆம்புலன்ஸ் வாகனங்களை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த புதிய வாகனங்கள் மூலம் மருத்துவ அவசரம் என தொடர்பு கொண்டால் மாநிலத்தின் எந்த பகுதிக்கும் 20 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்று உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியும்.
Comments