வெடிகுண்டு மிரட்டல்: மும்பையிலுள்ள 2 தாஜ் ஹோட்டல்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
மும்பையிலுள்ள தாஜ் ஹோட்டல்களுக்கு லஷ்கரே தொய்பா பயங்கரவாத அமைப்பிடம் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் கொலபாவிலுள்ள தாஜ் மகால் பேலஸ் ஹோட்டலில் புகுந்து 167 பேரை சுட்டுக் கொன்றனர். இந்நிலையில் தாஜ் மகால் பேலஸ் ஹோட்டலுக்கும், பாந்த்ராவிலுள்ள தாஜ் லேன்ட்ஸ் என்ட் ஹோட்டலுக்கும் பாகிஸ்தானில் இருந்து தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன.
தொலைபேசியில் பேசிய நபர், தாம் லஷ்கரே தொய்பா பயங்கரவாதி எனவும், ஹோட்டல்களை வெடிகுண்டுகள் மூலம் தகர்க்க போவதாக தெரிவித்துள்ளான். இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகம் அளித்த தகவலின்பேரில் 2 ஹோட்டல்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் மூடப்பட்ட நிலையில் 2 ஹோட்டல்களிலும் சுகாதார பணியாளர்கள், வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியோர் தங்க வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments