ஒரே நாளில் 39 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

0 2585

தமிழகத்தில் 4 மாநகர காவல் ஆணையர்கள் உள்பட ஒரே நாளில் 39 காவல்துறை உயரதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, மதுரை, திருச்சி மற்றும் திருப்பூர் மாநகர காவல் ஆணையர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு ஏடிஜிபி ரவி ஈரோடு சிறப்பு அதிரடிப் படைக்கு மாற்றப்பட்டார்.

சென்னை தலைமையக கூடுதல் ஆணையராக இருந்த ஜெயராம், திருச்சி மத்திய மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையரான பிரேம் ஆனந்த் சின்ஹா மதுரை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி காவல் ஆணையராக பொறுப்பேற்க உள்ளார்.

கோவை சரக டிஐஜியான கார்த்திகேயன் பதவி உயர்வுடன் திருப்பூர் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனரான எழிலரசன் விழுப்புரம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை துணை ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments