மாவட்டங்களுக்குள் பேருந்துப் போக்குவரத்து இன்று முதல் நிறுத்தம்
தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து, மாவட்ட அளவிலான பேருந்துப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கை தளர்த்தும் விதமாக, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மண்டல அளவிலான போக்குவரத்து கடந்த மாதம் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்டது. சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால், மாவட்ட அளவிலான போக்குவரத்துக்கு மட்டும் கடந்த வாரம் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் போக்குவரத்து இன்று முதல் 15ந் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் எப்பகுதியிலும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
மாவட்டங்களுக்குள் பேருந்துப் போக்குவரத்து இன்று முதல் நிறுத்தம் #TamilNadu | #TNGovt | #BusService https://t.co/myGxhwEppE
— Polimer News (@polimernews) July 1, 2020
Comments