வங்கி சேவைக்கு மீண்டும் கட்டணம்..!
கொரோனா ஊரடங்கையொட்டி வங்கிகளின் சேவைகள், ஏடிஎம்கள் போன்றவற்றில் வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகள் காலாவதியானதையடுத்து வங்கி கட்டணங்கள் இன்று முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு பெறப்படும் சேவைக் கட்டணம் மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டது. இன்று முதல் ஏடிஎம் கட்டணம் மீண்டும் அமலுக்கு வருகிறது. குறைந்த பட்ச வங்கி இருப்புக்கும் மூன்று மாதங்கள் சலுகை அளிக்கப்பட்டது. இன்று முதல் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்களைக் கட்டாயப்படுத்தக் கூடும்.
டிஜிட்டல் வர்த்தகத்திற்கான சேவைக் கட்டணங்களும் இந்த மூன்று மாதங்களில் கணிசமாகக் குறைக்கப்பட்டிருந்த நிலையில், இனி இந்த சலுகையும் இருக்காது.
வங்கி சேவைக்கு மீண்டும் கட்டணம்..! #Banks | #ATM https://t.co/RABuT3DSwM
— Polimer News (@polimernews) July 1, 2020
Comments