வாகன திருட்டு.. மோட்டார் சைக்கோ சிக்கியது எப்படி..!

0 5388

திருத்துறைப்பூண்டி அருகே கனரக வாகனங்களை திருடிச் சென்று ஓட்டி பழகும் சைக்கோ திருடன் போலீசாரிடம் சிக்கி உள்ளான். 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வரம்பியத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான டாரஸ் லாரி ஒன்று திருடப்பட்டது.

இது குறித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரித்த போலீசாருக்கு லாரியை திருடியவனின் முகம் தெளிவாக பதிவாகவில்லை என்பதால் அந்த லாரி குறித்த விவரங்களை பக்கத்து மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் பண்ருட்டி அருகே முந்திரிக்காட்டில் லாரி நிறுத்திச் செல்லப்படிருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.

அதனை மீட்டு விசாரித்த காவல் துறையினர், புதிய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றி திரிந்த இளைஞரை பிடித்து விசாரித்த போது லாரியை திருடிச்சென்ற பாங்கல் மணிவேல் என்பது தெரியவந்தது.

அவனிடம் நடத்திய விசாரணையில் அவன் கனரக வாகனங்களை திருடி ஓட்டிச்செல்லும் மோட்டார் சைக்கோ என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

டாரஸ் லாரியை பண்ருடிக்கு ஓட்டிச்சென்று டீசல் தீர்ந்ததும் முந்திரிக் காட்டில் அம்போவென விட்டுச்சென்ற மணிவேல், மற்றொரு லாரியை திருடிக்கொண்டு நாகப்பட்டினம் சென்றுள்ளான்.. அங்கு அதனை விட்டு, டாடா ஏஸ் வாகனத்தை திருடி ஓட்டிக் கொண்டு மீண்டும் திருத்துறைப்பூண்டிக்கு வந்துள்ளான்.

பேருந்தை திருடி ஓட்டும் நோக்கத்துடன் பேருந்து நிலையம் சென்றதாகவும் அங்கு பேருந்து இல்லாததால் பணிமனைக்கு சென்றதாகவும் அங்கு காவலாளி இருந்ததால் மீண்டும் பேருந்து நிலையம் வந்த போது போலீசிடம் சிக்கிக் கொண்டதாக தெரிவித்துள்ளான் மோட்டார் சைக்கோ மணிவேல்..!

சிலருக்கு வாகனங்கள் மீது அதீத பிரியம் ஏற்படும்... அதனை ஒருமுறையாவது ஓட்டி பார்த்து விட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டால் அதனை வாடகைக்கு பெற்றோ அல்லது உரிமையாளரிடம் கேட்டோ பயிற்சி பெறுவார்கள்...

இப்படி பார்த்தவுடன் வாகனத்தை திருடிச்சென்று ஓட்டிச் செல்வோர், மோட்டோர் சைக்கோ என்ற பெயருடன் ஜெயிலுக்கும் செல்ல வேண்டி இருக்கும் என்கின்றனர் காவல் துறையினர்....

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments