59 செயலிகளைத் தடை செய்ததற்கு இந்தியாவுக்கு சீனா கண்டனம்
தங்களது செயலியைத் தடை செய்ததன் மூலம் உலக வர்த்தக அமைப்பின் விதிகளை இந்தியா மீறி விட்டதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜி ரோங் விடுத்துள்ள அறிக்கையில், இந்தியா நியாயமான வணிகச் சூழலை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால் 59 செயலிகளை தடை செய்ததன் மூலம் உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறுவதாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்தத் தடை மூலம் செயலிக்காக பணியாற்றுபவர்களின் வேலைகளைப் பாதிப்பதாகக் கூறிய ஜி ரோங், அனைத்து முதலீடுகளையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
Comments