பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 100க்கும் மேற்பட்டோர் நாடு திரும்பினர்

0 3294
இந்திய அரசு உத்தரவை தொடர்ந்து குடும்பத்தினருடன் வெளியேறினர்

இந்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து, டெல்லியிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரிகள் 100க்கும் மேற்பட்டோர் தங்களது நாட்டுக்கு திரும்பிச் சென்றனர்.

இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் 2 பேர் காணாமல் போன விவகாரத்தில் டெல்லியிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்தது. இதேபோல் தூதரக அதிகாரிகள் 2 பேரை உளவு பார்ப்பதாக குற்றம்சாட்டி இந்தியா வெளியேற்றியது.

இதையடுத்து டெல்லியிலுள்ள தூதரக அதிகாரிகள் எண்ணிக்கையை பாதியாக குறைக்கும்படியும் பாகிஸ்தானை இந்தியா கேட்டுக் கொண்டது. இதையடுத்து பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள், குடும்பத்தினருடன் பஞ்சாப் மாநிலம் அட்டாரி - வாகா எல்லை வழியே தங்களது நாட்டுக்கு திரும்பிச் சென்றனர். மொத்தம் 143 பேர் சென்றதாக அட்டாரி எல்லையில் உள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments