உக்ரைன் நாட்டில் இருந்து நாடு திரும்பிய 144 இந்தியர்கள்
வந்தே பாரத் மிஷன் திட்டத்தின்கீழ் உக்ரைனில் இருந்து 144 இந்தியர்கள், நாட்டுக்கு இன்று திருப்பி அழைத்து வரப்பட்டனர்.
வெளிநாடுகளுக்கு சுற்றுலா, வர்த்தகம் போன்ற காரணத்துக்காக சென்றுவிட்டு, கொரோனா ஊரடங்கு, சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தம் போன்ற காரணங்களால் ஏராளமான இந்தியர்கள் திரும்பி வர முடியாமல் தவிக்கின்றனர். அவர்களை வந்தே பாரத் மிசன் திட்டத்தின்கீழ் ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் நாட்டுக்கு மத்திய அரசு திருப்பி அழைத்து வருகிறது.
அதன்படி, உக்ரைன் நாட்டில் சிக்கியிருந்த 144 பேர், ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள தேவி அகில்யா பாய் ஹோல்கர் விமான நிலையம் ((Devi Ahilya Bai Holkar Airport)) அழைத்து வரப்பட்டனர். விமான நிலையத்திலேயே பலகட்ட சோதனைகளை நடத்தி சொந்த ஊருக்கு 144 பேரை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Comments