அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா உறுதி

0 7720
அமைச்சர் அன்பழகனின் உடல்நிலை சீராக உள்ளது; தொடர் கண்காணிப்பில் உள்ளார்: மியாட் மருத்துவமனை

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சென்னை போரூர் பகுதியிலுள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலில் அமைச்சருக்கு அறிகுறிகள் எதுவும் தெரியாத நிலையில், அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையிலும் அனைத்தும் இயல்பாகவே இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து லேசான இருமல் ஏற்பட்ட நிலையில், அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், அமைச்சரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் கூறியுள்ளது. முன்னதாக கடந்த வாரத்தில் தனக்கு கொரோனா என பரவிய செய்திகளுக்கு அமைச்சர் அன்பழகனே மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments